எவனோ ஒருவன்
எவனோ ஒருவன் | |
---|---|
இயக்கம் | நிஷிகாந்த் காமத் |
தயாரிப்பு | அப்பாஸ்-மஸ்தான் கே சேரா சேரா இணை தயாரிப்பாளர்: மாதவன் |
கதை | உரையாடல்: மாதவன் உரையாடல் மேற்பாரவை : சீமான் |
திரைக்கதை | நிஷிகாந்த் காமத் பவுள் |
இசை | பி. சமீர் ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | மாதவன் சங்கீதா சீமான் |
விநியோகம் | லியூகோஸ் பிலிம்ஸ் பிரமிட் |
வெளியீடு | திசம்பர் 7, 2007 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எவனோ ஒருவன் 2007 ல் நிஷிகாந்த் காமத் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இது மராத்திய திரைப்படமான டோம்பிவ்லி ஃபாஸ்ட் படத்தின் மறு ஆக்கம் ஆகும். அப்படத்தை இயக்கிய நிஷிகாந்த் காமதே இப்படத்தின் இயக்குநரும் ஆவார். இதில் இயக்குனர் சீமான் ஒரு முக்கிய பாத்திரத்திலும், முன்னணி பாத்திரங்களில் மாதவன் மற்றும் சங்கீதா நடித்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர்கள் பி. சமீர் மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார்; பாடலாசிரியர் நா. முத்துக்குமார்.
கதை
[தொகு]ஒரு சாதாரண மனிதனின் கதை இது. ஒரு அளவான குடும்பத்தின் தலைவன் ஸ்ரீதர் வாசுதேவன. அவன் மனைவி வத்சலா மற்றும் அவன் இரு குழந்தைகள். சாதாரண நடுத்தர வர்க்கம். அவனின் நேர்மை எல்லோருக்கும் பிரச்சினையாய் இருக்கிறது. சமூகத்தின் நேர்மையின்மையால் வன்முறையாளனாக அவன் எப்படி மாறுகிறான் என்பதை படம் காட்டுகிறது.
பாடல்
[தொகு]படத்தில் ஒரே ஒரு இறுதி பாடல் "உனது எனது என்று உலகில் என்ன உள்ளது ??? உனது முகமும் எனது முகமும் உடைத்திடும் முகங்கலானது" என்ற நா. முத்துக்குமாரின் வரிகளில் படத்தின் முழு நோக்கத்தையும் அது கூறுகின்றது.